பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சிறி மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்த 21 ஆவது தேர்த்திருவிழா இன்று 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது./fg2015-1.jpg”>
தமிழ் வர்த்தக நிறுவனங்களும் வீடுகளும் அதிகமாகக் காணப்படும் லாச்சப்பல் பகுதி எங்கும் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்ததாகவும் வழமை போன்று இம்முறையும் பிரான்சின் பல பகுதிகள் மற்றும் பல நாடுகளில் இருந்தும் தேர்த்திருவிழாவில் மக்கள் கலந்துகொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவும் எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.
கலந்து கொள்ளும் மக்களுக்குரிய உணவு குடி தண்ணீர் வசதிகளும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
தேர் செல்லும் பாதைகள் தொடர்பாக பிரெஞ்சுக் காவல்துறையினர், பாரிஸ் 10 நகரசபை மற்றும் பாரிஸ் 18 நகரசபை ஆகியோரின் அறிவுறுத்தல்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு தேர்ப் பவனி வழமையாகச் செல்லும் பாதைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
(எரிமலைக்காக பாரிசில் இருந்து கங்கைவேந்தன்)