பிரான்சில் இடைநடுவில் நின்ற RER B தொடருந்து: பயணிகள் பெரும் அவலம்!

0
698

பிரான்சில் மித்ரிகிளே பகுதியில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட RER B தொடருந்து இன்று மாலை 17.00 மணியளவில் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக இரவு 19.00 மணிவரை செவ்ரோன் பகுதிக்கும் ஒள்னேசுபுவா பகுதிக்கும் இடையில் தரித்து நின்றது.
இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்ததாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்தார்.
பிரான்சில் தற்போது கடும் வெய்யில் காரணமாக வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் இடைநடுவில் குறித்த தொடருந்து நிறுத்தப்பட்டதால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பயணிகள் கடும் தாகத்துடன் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சிலர் மயக்கமுற்று விழுந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
பின்னர் இரண்டு மணிநேரத்திற்கு மேலாகியும் தொடருந்து சீர்செய்யப்படாத நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
(எரிமலைக்காக குறித்த தொடருந்தில் இருந்து தஜீவன்)
image-0-02-01-c0a90a7d33c8bb8f46d9e6cab5ad732cac79fd16c8963bd9ec081d5e32d54474-Vimage-0-02-01-b84b03bccaa4225d376a5e72a470357f741555927c578c53a4957b936b22d7ed-Vimage-0-02-01-bd5fba93873908f9b1fb73199a25a70cce92dab6e03e5b6238831bdc594dc68d-Vimage-0-02-01-<a href=image-0-02-01-526518c4ab3399737a530a8695ba44be3a60a98f556f754a99c221712d1baa5d-Vimage-0-02-01-16f9833e3709a5c97f953db7af342047a5a4129a1a1b912b69e620e242ad7c8e-Vdb82bb830eb619a0e7e92a66b4233fe3644b251af8525d8d87c73104ffd31638-V” width=”1280″ height=”720″ class=”aligncenter size-full wp-image-14578″ />

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here