நாரஹேன்பிட்டிய பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிய ரக விமானம் ஒன்றும், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்புகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனம் ஒன்றும், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான LCD திரை ஒன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தை சிலர் கொண்டு செல்ல முற்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நாரஹேன்பிட்ட பொலிஸார் அதனைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இரண்டு பேர் மாத்திரம் பயணிக்கக்கூடிய வசதிகளைக்கொண்ட இந்த சிறிய ரக விமானம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.