
கல்கயோ (Galkayo) நகரில் அமைந்துள்ள தலைமையக கட்டிடத்திற்கு வெளியில் குண்டுகள் பொருத்தப்பட்ட இரண்டு கார்கள் வெடிக்க செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
பெரும் சத்தத்துடன் இந்த குண்டுகள் வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் இராணுவத்தினரும் பொதுமக்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.
தமது போராளிகளே இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக அல் ஷாபாப் இஸ்லாமிய அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.