விஷ ஊசி­யினால் மர­ண­மானோர் பெயர் விபரப் பட்­டி­யலை தாருங்கள் : விக்­கி­யிடம் மனோ கணேசன்!

0
297

mano vikkyசர­ண­டைந்த அல்­லது கைது செய்­யப்­பட்ட விடு­தலைப் புலி இயக்க உறுப்­பி­னர்­க­ளுக்கு, புனர்­வாழ்வு நட­வ­டிக்­கை­களின் போது விஷ ஊசி செலுத்­தப்­பட்­டதால் மர­ண­ம­டைந்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­ற­வர்கள் தொடர்­பான

முழு­மை­யான விப­ரங்­க­ளையும் பெற்­றுத்­தா­ருங்கள் என்று என வட­மா­காண முதல்வர் சி. வி. விக்­னேஸ்­வ­ர­னுக்கு அனுப்­பி­யுள்ள மின்­னஞ்­சலில், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்­சரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.

அதில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

சர­ண­டைந்த அல்­லது கைது செய்­யப்­பட்ட விடு­தலை புலி இயக்க உறுப்­பி­னர்­க­ளுக்கு, புனர்­வாழ்வு நட­வ­டிக்­கை­களின் போது விஷ ஊசி செலுத்­தப்­பட்­ட­தா­கவும், அதனால் பலர் சந்­தே­கத்­துக்­குட்­பட்ட முறையில் இது­வ­ரையில் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­கவும் கூறி வட­மா­கா­ண­ச­பையில் ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இது ஒரு மிகவும் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டாகும். சுமார் 105 பேர் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­கவும் ஒரு தகவல் கூறப்­பட்­டது. இது­பற்றி நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­விலும் ஒரு முன்னாள் போரா­ளியால் சாட்­சியம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே இது­பற்றி, தேசிய சக­வாழ்வு அமைச்சர் என்ற முறையில் ஆராய்ந்து மேல் நட­வ­டிக்கை எடுக்க நான் முடிவு செய்­துள்ளேன். இது தொடர்பில் மேலும் தக­வல்­களை, உங்கள் மாகாண சுகா­தார அமைச்சின் மூல­மாக பெற்று தாருங்கள். நீங்கள் தரும் தகவல் திரட்டில் புனர்­வாழ்வு பயற்­சிகள் பெற்று வீடு திரும்­பிய பின்னர் சந்­தே­கத்­துக்கு உள்­ளான முறையில் இறந்து போன­தாக கூறப்­படும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பி­னர்­களின் பெயர்கள், அடை­யாள அட்டை இலக்கம், கடை­சி­யாக வாழ்ந்த விலாசம், பிர­தேச செய­லாளர் பிரிவு, இறந்­த­போது அவர்­க­ளது வயது, அவர்­க­ளது இறப்­பிற்­கான அதி­கா­ரப்­பூர்வ மருத்­துவ காரணம், இறந்த திகதி, தொடர்பு கொள்­ளக்­கூ­டிய குடும்ப உறுப்­பி­ன­ரது பெயர், விலாசம், தொலை­பேசி இலக்கம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கி தாருங்கள்

இந்த விவ­காரம் தொடர்பில் கடந்த வாரம் உங்­க­ளுடன், கொழும்பில் இருந்து பலா­லிக்கு பய­ணிக்கும் வேளையில் நேர­டி­யாக உரை­யா­டி­யுள்ளேன். இந்த தக­வல்­களை பெற்று தரும்­படி அப்­போதும் கோரி­யி­ருந்தேன். இந்­நி­லையில் உங்கள் மாகா­ண­ச­பையின் அமைச்சர் டெனிஸ்­வரன் இந்த விடயம் தொடர்பில் மாறு­பட்ட கருத்தை தெரி­வித்து வரு­வ­தையும் உங்கள் கவ­னத்­துக்கு கொண்டு வரு­கிறேன். எனவே இது தொடர்பில் ஒரு­மித்த கருத்தை ஏற்­ப­டுத்தி, நான் கோரி­யுள்ள விப­ரங்­களை கூடிய விரைவில் எனக்கு அனுப்பி வையுங்கள்.

மேற்­கண்ட தக­வல்கள் கிடைக்­கப்­ப­டு­மானால், இது தொடர்பில் காத்­தி­ர­மான மேல் நட­வ­டிக்­கைகள் எடுக்க முடியும் என நான் நம்­பு­கிறேன். ஏனை­யோ­ருக்கு மருத்­துவ பரி­சோ­தனை செய்­யப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை, இத்­த­கைய தக­வல்கள் மேலும் வலு­வ­டைய செய்யும். இத்­த­கையை சம்­ப­வங்கள் நடை­பெ­ற­வில்லை என வடக்­கிலும், தெற்­கிலும் கூறி­வ­ரு­வோ­ருக்கும் இது பதிலாக அமையும் என நம்புகிறேன். அத்துடன் இந்த தகவல்கள் முழுமையாக இல்லாத நிலையில் இந்த குற்றச்சாட்டு ஏற்புடமை கொண்ட ஒரு குற்றச்சாட்டாக ஏற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கல் இருக்கின்றது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here