தெற்கு அட்லாண்டிக் கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி ஆய்வு மையத்தின் தகவல் படி, இது அர்ஜென்டினாவின் தென்கிழக்கு பகுதியில் 1500 மைல்கள் தூரத்திற்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இது பிரித்தானியாவை மையப் பகுதியாக வைத்து தெற்கு ஜார்ஜியா தீவு பகுதியில் ஏற்பட்டுள்ளது என்று ஜேர்மன் ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.
பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
அதேசமயம் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல் படி, பிரித்தானிய அண்டார்டிகா ஆராய்ச்சி மையத்தை கொண்ட தீவில் இருந்து 195 மைல் தூரத்தில் இது மையம் கொண்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், இது 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்த ஆய்வு மையம், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தெளிவாக இருப்பதாகவும், இது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் ரியோ டி ஜெனீரோ நகரை குறி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.