யாழ்.பல்கலை மோதல்; தமிழ் மாணவர்கள் மூவருக்கு மேல் நீதிமன்றம் அழைப்பாணை!

0
195

universityயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதலுக்கு காரணமாக இருந்தார்கள் என்று கூறப்படும் தமிழ் மாணவர்கள் மூவருக்கு, யாழ்.மேல் நீதிமன்றம் நேற்றையதினம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

குறித்த மாணவர்கள் மூவரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த மாதம் விஞ் ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் போது வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் மூலம் மாணவர்களை தாமும் வரவேற்க வேண்டும் எனவும் முரண்பட்டனர்.

எனினும் தமிழ் மரபுப் படி மாணவர்கள் அழைத்து வரப்பட்ட வேளை, திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சிங் கள மாணவர்கள் கண்டிய நடனத்தை அங்கு கொண்டு வந்து ஆடினார்கள்.
இதனால் கொதிப்படைந்த தமிழ் மாணவர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றியும், நிகழ்ச்சி ஒருங்கமைப்புக்கு மாறாக எவ்வாறு கண்டி நடனம் கொண்டுவரப்பட்டது என சிங்கள மாணவர்களிடம் கேட்டனர்.

இதன்போது வாக்கு வாதம் முறுகல் நிலைக்கு செல்ல இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்களை அடுத்து இருதரப்பு மாணவர்களும் கற்களாலும், கொட்டன்களாலும் தாக்குதலில் ஈடுபட, பல்கலைக்கழகமே கலவர பூமியாக காணப்பட்டது.

இதன் காரணமாக பொலிஸார் சம்பவவிடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவங்களையடுத்து பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் சிசிதரன் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு தேடப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே மேலும் 3 மாணவர்களுக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here