இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வரும் புத்தர் சிலை கட்டுமா னப்பணிகளை உடன் நிறுத்து மாறு கோரியும், புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு வலியுறு த்தியும் வடக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்று நிறை வேற்றப் பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 59 ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி பிரே ரணை எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
1957ஆம் ஆண்டு இரணைமடு குளத்தினை தீர்த்தத் தலமாக கொண்டு யோகர் சுவாமிகளால் ஆர ம்பிக்கப்பட்ட இரணைமடு கனகா ம்பிகைக்குள அம்மன் ஆலயத்தி ற்கு 13.5 ஏக்கர் காணி இருந்தது.
இதில் தற்போது ஒன்பது ஏக்கர் காணி மாத்திரமே ஆலய நிர் வாகத்தின் கீழ்காணப்படுகிறது. மிகுதி 4.5 ஏக்கர் காணியும் இராணு வத்தின் பிடியில் இருக்கிறது. எனவே குறித்த காணியை மீண் டும் ஆலயத்திற்கு பெற்றுத்தருமாறு ஆலய நிர்வாகம் 2009ற்கு பின் னர் அதிகாரிகள், அரசியல்வாதி கள், இராணுவத்தினர் என பலரிட மும் பல தடவைகள் கோரியும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக் கையும் இல்லை.
இந்து கலாசார மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாத னின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டும் நடவடிக் கைகள் ஆரோக்கியமான நடவடிக் கைகள் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் சுவாமி நாதன் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நிலைமை களை நேரில் பார்த்தமைக்கு அமைவாக இராணுவத்தின் பிடி யில் இருந்து தீர்த்தத் தலத்திற்குச் செல்கின்ற ஆலயத்தின் முன் வீதி மீளவும் ஆலயத்திடம் ஒப்படைக் ;கப்பட்டது.
ஆனால் காணி இன்றும் இராணு வத்தின் பிடியிலேயே உள்ளது. கடந்த 14-07-2016 அன்று 99 அடி உயரம் கொண்ட இராஜகோபுரம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட் டது. இதனை தொடர்ந்து இராணு வம் ஏற்கெனவே திட்டமிட்டு ஆர ம்பகட்டப் பணிகளை மட்டும் மேற்கொண்டிருந்த சுமார் நூறு அடி உயரம் கொண்டதாக அமை யும் வகையில் அமைக்கப்பட்டி ருந்த விகாரைக்கான பணி களை துரிதமாக முன்னெடுக்க தொடங் கியுள்ளனர்.
ஆலயத்திலிருந்து நூறு மீற்றருக்குள் இந்த விகாரை அமைக் கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பெரியளவிலான புத்தர் சிலை அங்கு நிர்மாணிக்கப்பட்டு விட்டது. அதற்காகவே ஆலயத் தின் மூன்றாவது வீதி அமைந் துள்ள ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் இதுவரை காலமும் தற்காலிகமாக தூண் போடப்பட்டு இராணுவத்தினரால் வேலி அமைக்கப்பட்டிருந்தது. எனவே குறித்த காணியை மீண்டும் ஆல யத்துக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிகை ஆலய நிர்வாகத் திடம் இருந்து வந்தது.
ஆனால் தற்போது இராணுவம் நிரந்தரமாக சுற்று மதில் அமைக் கும்பணியில் ஈடுபட்டிருப்பதானது ஆலயத்தின் காணி மீண்டும் ஆல யத்திற்கு கிடைக்க வாய்ப் பில்லை என்ற நிலைப்பாட்டினையே ஏற்படுத் தியுள்ளது என ஆலய நிர்வாகம் கவலை தெரிவிக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத் திற்கு மிக அருகில், முழுக்க முழு க்க தமிழ் மக்கள்வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் பாரிய விகாரை அமைப்பது பொது மக்கள் மத்தி யிலும்பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிலையிலேயே இந்த பிரேரணை அவசர அவசரமாக உறுப்பினர் பசுபதிப்பிள்ளையால் கொண்டுவரப்பட்டு அனைவரது ஆத ரவுடனும் வடக்கு மாகாண சபை யால் நிறைவேற்றப்பட்டுள்ளது.