சிறிலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட 107 போராளிகளின் மர்மச்சாவுகள் தொடர்பாக சர்வதேசத்தின் முன்னிலையில் நீதி விசாரணை வேண்டிய போராட்டம் இன்று 17.08.2016 புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றத்தின் முன்பாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குர்திஸ்டான் மக்களும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.
குர்திஸ்டான் மக்கள் தொடர்ச்சியாக எமது போராட்டங்களுக்கு தமது ஆதரவினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.