தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் விச ஊசி ஏற்றப்பட்டமையால் உயிரிழந்து வருகின்றமை தொடர்பில் மருத் துவ பரிசோதனை மேற்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 59 ஆவது அமர்வு நேற்றைய கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது விச ஊசி விவகாரம் குறித்து அமைச்சர் டெனிஸ்வரனால் கேள் விக்குட்படுத்தப்பட்டது. போராளி களுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது என்பது குறித்து முன்னதாகவே இரகசியமாக பரிசோதனை செய் திருக்க வேண்டும்.
இந்த வாய்மூல குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் முடிவு வேறுவிதமாக வந்தால் அது ஒட்டுமொத்த முன் னாள் போராளிகளுக்கும் அவப் பெயரை ஏற்படுத்திவிடும். தமிழர் கள் சர்வதேசத்திடம் பொய் கூறு பவர்கள் என்றாகிவிடும். இவ்வாறு தான் இந்த ஆய்வில் ஒன்றும் இல்லை என முடிவு வரும் என அமைச்சர் டெனிஸ்வரன் கூறி னார்.
இதன் பின்னர் உரையாற்றிய உறுப்பினர் சிவாஜிலிங்கம், இவ் வாறு இந்த குற்றச்சாட்டை நாமே நிராகரித்தால் அது வேறுவிதமாக காட்டப்படும். எனவே இது விடயத் தில் அவதானம் தேவை. தற்போது அமெரிக்க விமானப் படையினர் இங்கு வந்து மருத்துவ முகாம் களை நடத்துகின்றனர்.
அவர்களிடம் எமது முன்னாள் போராளிகளை அழைத்து சென்று இரத்தமாதிரிகளை வழங்கி மருத் துவ பரிசோதனை செய்யுமாறு கோர முடியும் என கூறினார். இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு முதலமைச்சர் இது தொடர் பில் அமெரிக்க தூதுவருடனான சந்திப்பின்போது பேசியிருந்த தாகவும், அவர் சில முன்னாள் போராளிகளை குறித்த மருத்துவ முகாமுக்கு அனுப்பி வைக்கு மாறும், அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் பரிசோதனை செய்ய தயார் என என்னிடம் கூறி யுள்ளார்.
எனவே விச ஊசியால் பாதிக் கப் பட்டவர்கள் என சந்தேகிக்கும் போராளிகளின் விபரங்களை வட க்கு மாகாண சபை உறுப்பி னர்கள் தம்மிடம் ஒப்படைக்குமாறு முதல மைச்சர் தெரிவித்தார். (செ-4)