சிறீலங்கா பேரினவாத அரசின் மிலேச்சத்தனமான விமானக்குண்டுவீச்சினால் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மாணவிகளின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மற்றும் 27.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்துசெய்யக்கோரி தன்னைத் தீயிற்கு ஆகுதியாக்கிய வீரத்தமிழிச்சி தோழர் செங்கொடி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் பிரான்சு பாரிசு Republique பகுதியில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செஞ்சோலை மாணவர்களுக்கான திரு உருவப்படத்திற்கான ஈகச்சுடரினை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட்கேணல் உருத்திரன், 1997 ஆம் ஆண்டில் முல்லைத்தீவுக்கடற்பரப்பில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் மாவேந்தன் ஆகியோரின் சகோதரன் ஏற்றிவைக்க, தோழர் செங்கொடி அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 2001 ஆம் ஆண்டில் திருகோணமலைப் பகுதியில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப் ஆதவனின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தமிழ்,பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியில் நினைவுரைகள் இடம்பெற்றன. செவ்ரோன் தமிழ்ச்சோலை மாணவிகளின் எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவு கண்டது.
Home
சிறப்பு செய்திகள் பாரிசில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!