காரைநகரில் பாடசாலை மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

0
193

11287காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவியொருவர் வயற்கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி கொலை செய்யப்பட்ட பின்னர் கிணற்றுக்குள் போடப்பட்டாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்த சண் முகராஜக் குருக்கள் துவாரகா (வயது 16) என்ற என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு சுமார் எட்டு மணியளவில் வீட்டில் இருந்து குறித்த சிறுமி காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து அவரை தேடி அவரது பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பா டொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.முறைப்பாட்டை அடுத்து குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் உறவினர்கள் இணைந்து ஈடுபட்டிருந்த போதும் குறித்த மாணவியை கண்டுபிடித்திருக்க முடியவில்லை.

இந்நிலையிலேயே நேற்று மாலை குறித்த மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரமளவில் உள்ள வயல் வளவொன்றுக்குள் உள்ள கிணற்றுள் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவ்வளவிற்குள் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக வந்த சிலரே கிணற்றினுள் சடலமிருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இம் மாணவி எவ்வாறு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார். இவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுள் வீசப் பட்டாரா? அல்லது தற்கொலை சம்பவமா? என்பது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ.சபேசன் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

சன நடமாட்டம் குறைந்த வயற்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், சடலத்தில் எந்தவிதமான பெரிதான காயங்கள் ஒன்றும் வெளித் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவ இடத்திற்கு சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here