செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் கொல் லப்பட்ட 61 மாணவிகளின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட் டம் வள்ளிபுனம் பகுதி யில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதியன்று விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன்;, 129 பேர் காயமடைந் திருந்தனர்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மாணவிகளின் நினைவாக கல்லறைகள் அமைத்து அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் ஈகச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், கொல்லப்பட்ட மாணவிகளின் பெற்றோர் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்