தமிழீழத்தில் தொடர்ந்து நிகழும் தமிழினப்படுகொலை.
ஈழப் போர்க்கைதிகளான விடுதலைப்புலி போராளிகளை கொன்று அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், தமிழக மக்களுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் ஒன்று கூடுகிறோம்.
நமது ஒவ்வொரு சிறு பங்களிப்பும் இப்பெரும் யுத்தத்தில் சிறு நகர்த்தலை செய்யுமென நம்பிக்கையோடு கைகோர்ப்போம்.
போராளிகள் சிறைக்குள்ளும், வெளியேயும் சிதைக்கப்படும் காலகட்டத்தில், நமது போராட்ட குரல்களே அவர்களுக்கான நீதியை கொடுக்கும்.
நாம் நேசிக்கும் போராளிகளுக்காக குரல் கொடுக்க முன்வரவில்லையெனில், நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது சாத்தியமல்ல.
உங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இந்த மறைமுக யுத்தத்தினை வெல்லத் தேவையானவை.
அவசியம் பங்கெடுக்க வாருங்கள்.
நாள் : 13-8-2016, சனி மாலை 4 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
—
மே பதினேழு இயக்கம்
May 17 Movement