விஸ்­வ­ரூ­ப­மா­கி­ வரும் புத்தர்சிலை விவ­காரம் !

0
482

puththar-1வடக்கு, கிழக்கில் பௌத்த மேலா­திக்­கத்தை நிறுவும் வகையில் படைத்­த­ரப்­பி­ன­ரது செயற்­பா­டுகள் அமைந்துவரு­வ­தா­கவும் இதற்கு மாறி மாறி வரும் அர­சாங்­கங்கள் உறு­துணை புரிந்துவரு­வ­தா­கவும் கடும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றன. வடக்கு, கிழக்கில் தமி­ழர்கள் செறிந்துவாழும் பகு­தி­களில் புத்தர் சிலைகள் நிறு­வப்­பட்டு வரு­கின்ற விட­ய­மா­னது பல்­வேறு வகை­களில் முரண்­பா­டு­களை தோற்­று­வித்து வரு­கின்­றது.
யுத்தம் இடம்­பெற்ற காலத்தை விடவும் தற்­போது பல பகு­தி­க­ளிலும் திடீர் திடீ­ரென புத்தர் சிலைகள் முளைத்து வரு­கின்­றன. வவு­னி­யா­வி­லி­ருந்து ‘ஏ–9’ வழி­யாக யாழ்ப்­பா­ணத்தை நோக்கிச் செல்லும் போது பல இடங்­களில் புத்தர் சிலைகள் வைக்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. தற்­போது கிளி­நொச்சி, இர­ணை­மடு குளத்­திற்கு அருகில் அமைந்­துள்ள கன­காம்­பிகை ஆல­ய வளாகத்தில் புத்தர் சிலை அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது.
யுத்தம் முடி­வ­டைந்து 7 வரு­டங்கள் ஆகி­விட்ட போதிலும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் பெரு­ம­ள­வான பகு­தி­களில் படை­யினர் நிலை­கொண்­டுள்­ளனர். முன்னர் விடு­த­லைப்­பு­லி­களின் அலு­வ­ல­கங்கள், முகாம்கள் இருந்த பகு­தி­களை படை­யினர் தொடர்ந்தும் தமது கட்­டுப்­பாட்டின் கீழேயே வைத்­தி­ருக்­கின்­றனர். இப்­ப­கு­தி­களில் உள்ள பொது­மக்­களின் காணிகள் மீளவும் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை. இப்­ப­கு­தியில் வீடுகள், காணி­களை உடைய மக்கள் தமது சொத்­துக்­களை மீள ­வ­ழங்­கு­மாறு அர­சாங்­கத்­திடம் விண்­ணப்­பித்­துள்­ள­போதிலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
பொது­மக்­களின் காணி­களை மீள ஒப்­ப­டைக்­கு­மாறு புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்ற அமைச்சு பாது­காப்பு அமைச்­சுக்கு கடி­தங்­களை அனுப்­பு­கின்­ற­போ­திலும் அவற்றை மீளக்­கை­ய­ளிக்க படைத்­த­ரப்­பினர் இணங்­கு­வ­தாக இல்லை. வெவ்­வேறு வித­மான சாக்­குப்­போக்­குக்­களை கூறி பொது­மக்­களின் கோரிக்­கை­களை படைத்­த­ரப்­பினர் தட்­டிக்­க­ழித்து வரு­வ­தா­கவே தெரி­வி­கின்­றது.
இவ்­வாறு பொது­மக்­களின் காணிகள் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­டாத நிலையில் அப்­ப­கு­தி­களில் புத்தர் சிலை­களை .படைத்­த­ரப்­பினர் நிர்­மா­ணித்து வரு­கின்ற செயற்­பா­டா­னது பௌத்த மேலா­திக்­கத்தை மேலோங்கச் செய்யும் நட­வ­டிக்­கை­யா­கவே பொது­மக்­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றது.
தற்­போது கிளி­நொச்சி கன­காம்­பிகை ஆல­யத்தின் மூன்றாம் வீதியில் இரா­ணு­வத்­தி­னரால் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதனைச் சூழ மதில் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த கட்­டு­மான வேலை­களில் பெரு­ம­ள­வான படை­யினர் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இந்த விவ­கா­ர­மா­னது கிளி­நொச்­சி வாழ் மக்­க­ளி­டையே பெரும் அதிருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
நாட்டில் மக்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அர­சாங்­க­மா­னது நட­வ­டிக்கை எடுத்துவரு­வ­தாகக் கூறப்­படும் நிலையில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகு­தி­களில் திட்­ட­மிட்ட வகையில் புத்­தர்­சி­லைகள் நிறு­வப்­பட்டு வரு­கின்­ற­மை­யா­னது நல்­லி­ணக்க முயற்­சி­யி­லேயே சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இர­ணை­மடுக் குளமும் கன­காம்­பிகை அம்மன் ஆல­யமும் இரா­ணுவ முகாம்­க­ளாலும் காவ­ல­ரண்­க­ளாலும் முற்­று­கை­யி­டப்­பட்­டி­ருந்­தன. தற்­போதும் ஆல­யத்தின் காணியில் ஐந்து ஏக்கர் நிலப்­ப­குதி இரா­ணு­வத்தின் முகா­மாக உள்­ளது. அப்­ப­கு­தியில் வசித்த மக்­களின் பல ஏக்கர் காணி­களில் இரா­ணு­வத்­தினர் பாரிய படை­மு­காமை அமைத்­துள்­ளனர். இவ்­வா­றான நிலை­யி­லேயே கன­காம்­பிகை ஆலய வளா­கத்தில் புத்தர் சிலை நிறு­வப்­பட்­டி­ருக்­கின்­றது. அதனைச் சூழ தற்­போது மதில் அமைக்கும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
இவ்­வா­றான பௌத்த மேலா­திக்க நட­வ­டிக்­கை­யினை தமிழ் அர­சியல் கட்­சி­களும் கண்­டித்­துள்­ள­துடன், போராட்­டத்­திற்கு ஒன்­றி­ணை­யு­மாறும் அழைப்பு விடுத்­துள்­ளனர். இவ்­வி­டயம் குறித்து கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. இரா­ணு­வத்­தி­னரின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது கிளி­நொச்சி மாவட்­டத்தை முற்­று­மு­ழு­தாக சிங்­கள மயப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களின் ஒரு பகு­தி­யா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இதனைத் தடுப்­ப­தற்கு வேறு­பா­டு­களை மறந்து ஓர­ணியில் ஒற்­று­மை­யாகத் திர­ள­வேண்டும். கட்­ட­மைப்பு சார் இன அழிப்பை மேற்­கொள்­வதன் மூலம் தமிழ் தேசி­யத்தின் இருப்பை இல்­லாது அழிக்கும் செயற்­பா­டு­களை இலங்கை அரசு கடந்த ஏழு தசாப்­தங்­க­ளா­கவே வடக்கு, கிழக்கில் மேற்­கொண்டு வந்­துள்­ளது. இதன் ஒரு அங்­க­மா­கவே இந்த புத்தர் சிலை அமைக்­கப்­ப­டு­கின்­றது என்று அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இத­னை­விட தற்­போது தமிழர் தாய­கத்தில் வடக்கு பிர­தே­சத்தின் இத­யப்­ப­கு­தி­யா­கவும் முழு­மை­யாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­யா­கவும் உள்ள கிளி­நொச்சி மாவட்­டத்தின் இர­ணை­மடு பிர­தே­சத்தின் தமி­ழரின் பண்­பாட்டு அடை­யா­ளங்­களை அழித்து பௌத்த மேலா­திக்­கத்தை ஏற்­ப­டுத்தி படிப்­ப­டி­யாக சிங்­கள குடி­யேற்­றங்கள் மற்றும் இரா­ணுவ குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்தி தமி­ழர்­க­ளது சனத்­தொகைப் பரம்­பலை மாற்­றி­ய­மைக்கும் நோக்கில் இந்த பௌத்த விகாரை அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்­னணி தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
இர­ணை­மடு கன­காம்­பிகை ஆலய வளவில் புத்தர் சிலை அமைக்­கப்­படும் விட­யத்­திற்கு அகில இலங்கை இந்து மாமன்­றமும் தமது கண்­ட­னத்தை தெரி­வித்­தி­ருக்­கின்­றது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய பிர­தே­சங்­களில் இரா­ணு­வத்­தி­னரால் விகா­ரைகள் அமைக்­கப்­பட்டு வரு­வதை நாம் ஏற்­க­னவே ஜனா­தி­பதி, பி­ர­தமர், அமைச்­சர்கள், எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்ளோம். ஆனாலும், இந்த நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­ப­டாமல் தொடர்­வது கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும். கன­காம்­பிகை ஆலய வளவில் விகாரை அமைப்­பதை உடன் தடுத்து நிறுத்­தவும் அங்­கி­ருந்து இரா­ணு­வத்­தி­னரை அப்­பு­றப்­ப­டுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்று இந்த மாமன்­றத்தின் தலைவர் கந்­தையா நீல­கண்டன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்,
இதற்­கெல்லாம் ஒருபடி மேலே சென்று பேலி­ய­கொடை, கங்­கா­ராம பௌத்த விகா­ரையின் மத­குரு விமல ஹன தேரர் இந்த புத்தர் சிலை நிர்­மாண விவ­கா­ரத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருக்­கின்றார். கன­காம்­பிகை கோயி­லுக்கு அருகில் எந்­த­வி­த­மான அனு­ம­தி­யு­மின்றி பௌத்த விகாரை அமைக்­கப்­ப­டு­மாயின் அது பௌத்த மதத்­திற்கு முர­ணா­ன­தாகும் என்று அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
கிளி­நொச்சி பொன்­ன­நகர் பகு­தியில் இடம்­பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட அவ­ரிடம் இந்த விவ­காரம் குறித்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பி­ய­போதே அவர் இதற்­கான எதிர்ப்­பினை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். தமி­ழர்கள் செறிந்துவாழும் பகு­தியில் முன் அனு­ம­தி­யின்றி அவர்­களின் விருப்­ப­மின்றி புத்­தர் சிலை வைக்­கப்­ப­டு­வ­தனை பௌத்த தேரரே எதிர்க்கும் நிலையில் அதற்­கான நட­வ­டிக்­கை­களை படைத்­த­ரப்­பினர் எடுப்­ப­தா­னது எந்­த­வ­கை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாத செயற்­பா­டே­யாகும்.
சில வாரங்­க­ளுக்கு முன்னர் திரு­கோ­ண­மலை – சாம்பல்தீவு சந்­தி­யிலும் பல­வந்­த­மாக புத்தர்சிலை வைக்­கப்­பட்­டது. இதனால் இப்­ப­கு­தியில் வாழும் மக்­க­ளி­டையே பெரும் முறுகல் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. 2006 ஆம் ஆண்டு திரு­மலை நக­ரப்­ப­கு­தியில் புத்தர் சிலை நிறு­வப்­பட்­ட­தை­ய­டுத்து பெரும் முரண்­பாடு எழுந்­தி­ருந்­தது.
இதேபோல் யாழ்ப்பாணம், நயினாதீவுப் பகுதியில் 80 அடி உயர புத்தர் சிலையினை அமைப்பதற்காகன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள­தாகவும் இதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் இந்த விடயம் தொடர்பில் அரசாங்க­மானது தனது உறுதியான நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்காத போதிலும் நடவடிக்கைகள் தொடர்வதாகவே தெரிகின்றது.
இவ்வாறு வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய பூமிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றமை எந்தவகையிலும் இன நல்லுறவை ஏற்படுத்துவதற்கு உதவப்போவதில்லை. பௌத்த மேலாதிக்கத்தை வடக்கு, கிழக்கில் திணிக்கும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் இனியாவது நிறுத்தப்படவேண்டும்.
நல்லிணக்க முயற்சிகள் இடம்பெற்று வரும் இந்த வேளையில் புத்தர்சிலை விவகாரம் குறித்து அரசாங்கமும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

(Virakesari)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here