மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால், சுமார் 200 தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி, நாளைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதற்கு தயாராகியுள்ள நிலையில், அவர்களை விடு விப்பதில் என்ன பிரச்சினை உள்ளதென அவர் இதன்போது கேள்வியெழு ப்பியுள்ளார்.
வவுனியாவில் நேற்று (சனின்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில், அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய சுரேஸ் பிரேமச்ச ந்திரன் மேற்குறித்த வினாக்களை எழுப்பியுள்ளார்.
இதேவேளை, புதிய அரசியல் சாசனத்தை கொண்டுவருவதற்காக சர்வதேச நிர்ப்பந்தங்களை எவ்வாறு உள்வாங்குவது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டுமென குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், சமஷ்டி, அதிகார பகிர்வு உள்ளிட்ட விடயங்களுக்கு அரசாங்கம் உடன்படாத சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகத்துடன் பேசி அதற்கான நிர்ப்பந்தங்களை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.