மாவீரர்களை அங்கீகரியுங்கள் துயிலுமில்லங்களை விடுவியுங்கள்: பாதிக்கப்பட்ட மக்கள்!

0
237
maaveerarவிடுதலைக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களை அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கான நினைவு நிகழ்வுகளை பொது இடங்களில் செய்வதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் விடுவிக்கப்பட்டு அவை புனரமைக்கப்பட வேண் டும் என்ற கோரிக்கைகளை நல்லிணக்க பொறி முறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலய செய லணியிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காணாமல் போனோருக்கான நினைவுத்தூபி ஒன்றும் அமைக்கப்பட்டு, இவை மீள் நிகழக் கூடாது என்பது உறுதிப்படுத்தப்படல் வேண்டும். மேலும் காணாமல் போவதற்கு காரணமானவர்கள், போர்க்குற்றவாளிகள், தூண்டியவர்கள், நேரடி தொடர்புடையவர்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றின் குற்றவியல் வழக்குகளின் ஊடாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கு மணிவரை மேற்குறித்த செயலணியின் அமர்வு நடைபெற்றது. இதன்போதே யுத்தத்தினாலும், காணாமல் போதல்கள் உட்படபல அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் தொடர் பில் எத்தனையோ விசாரணைகள், குழுக்கள் நியமிக்கப்பட்டும் இதுவரை அதற்கான தீர்வு ஒன்றும் கிடைக்கவில்லை.
நீதியும் கிடைக்கவில்லை, அந்த குற்றங்கள் நின்றபாடுமில்லை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தமது அரசியல் போட்டியை காரணம் காட்டி அதிலிருந்து தப்பித்துக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நாங்கள் எவ்வாறு இவர்களை நம்ப முடியும், அரசியல் காரணங்களை காட்டி நீதியை தாமதிப்பது அல்லது மறுப்பது ஏற்புடையதாகுமா? இப்படி ஜனநாயக உலகத்தின் எங்காவது மூலையில் உள்ளதா?
எனவே உள்நாட்டு நீதித்து றையையும் அதனை நியமிப்பதாக கூறும் அரசாங்கத்தினையும் நாம் ஒருபோதும் நம்பப்போவதில்லை. சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.
சர்வதேச விசாரணையில் குற்றம் நிகழ்த்தியவர்கள் இணைக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களும் அதில் விசாரணையாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.
மேலும் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு நினைவு தூபி வடக்கு கிழக்கில் அமைக்கப்படுவதோடு, எமது மாவீரர்களும் அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் உறங்கும் மாவீரர் துயிலுமில்லங்கள் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.
இதனையே இப்போது நாம் கோருகின்றோம். போரில் உயிரிழந்த இராணுவத்தை நினைவு கூர முடியுமென்றால் அதே போரில் உயிரிழந்த எமது போராளிகளை ஏன் நினைவு கூரமுடியாது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here