கடைசி நிமிடத்தில் வெடித்த விமானம்! பயணியின் திகில் அனுபவம்!

0
173

11157எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயில் அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பயத்தில் அலறி துடித்தனர்.

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ’போயிங்’ ரக விமானம் 282 பயணிகள் மற்றும் 18 விமான குழு என 300 பேருடன் துபாய்க்கு சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறங்க அனுமதி கேட்டார்.

இதனையடுத்து அந்த விமானத்திற்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. விமானம் துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் பயங்கர சப்தத்துடன் மோதி தரையிறங்கியது.

இந்நிலையில் அந்த விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறி துடித்தனர்.

பின்னர் உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்து காயமின்றி தப்பிய கேரளாவை சேர்ந்த சாய் பாஸ்கர் தனது பயங்கர அனுபவத்தை நிருபர்களிடம் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், விமானம் அவசரமாக தரையிறங்கிய போது முன்பக்க சக்கரம் உடைந்தது. இதனால் விமானம் கிடுகிடுவென ஆட தொடங்கியது. இதனால் நாங்கள் பீதியில் கத்தினோம்.

இதன் பின்னர் விமானம் நின்றதும், உடனடியாக, அவரச வழிப்பாதை வழியாக குதித்து வெளியேறினோம். நான் தான் கடைசியாக வெளியேறிய பயணி என்று நினைக்கிறேன்.

நாங்கள் வெளியேறி ஒரு நிமிடத்திற்குள், விமானத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. இதன் பிறகு புகை மண்டலம் அதிகரித்தது. நல்ல வேளையாக ஒரு நிமிட இடைவெளியில் நாங்கள் உயிர் தப்பினோம்.

புகை மூட்டம் காரணமாக, சில பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஆனால் சிறு காயம் இன்றி அனைவரும் தப்பிவிட்டோம். உதவிக்கு கூட யாரும் வரவில்லை. நாங்களாகத் தான் எங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here