கீரிமலையில் மீன்பிடி துறைமுகம்; விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பு!

0
221

vikkiஇந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்ப தற்கான அரசாங்கத்தின் முயற்சி சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆடி அமாவாசை தினத்தை யொட்டி, கீரிமலையில் நடைபெற்ற பிதுர் கடன் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றுகை யில்,

இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான எங்கள் நகுலேஸ்வரம் அதன் புனிதம் கெடாது பாதுகாக்கப்படவேண்டிய ஒரு சைவசமய அடையாளச் சின்ன மாகும்.
இத்தலத்தையும் இதனை சூழ வுள்ள பகுதிகளையும் நாம் போற் றிப் பாதுகாப்பதற்கும் அதன் புனி தத்தை பேணுவதற்குத் தவறிய காரணத்தினாலேயே கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இப் பகுதிக்கு பொது மக்கள் ஒருவரும் வரமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் ஒருசில புண்ணிய புரு~ர்களின் வழிபாடுகளாலும் எதிர்பார்ப்பாலும் இன்று இப்பகுதிக்கு அடியவர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு பிரதேசமாக இது மாற்றப்பட்டி ருக்கின்றது.
எனவே இந்த புண்ணிய பூமியை அதன் புனிதம்குன்றிவிடாது பாது காக்க வேண்டியது எம் அனைவர தும் தார்மீகப் பொறுப்பாகும்.

கீரிமலை புண்ணிய தீர்த்தத் தின் மகிமை பற்றியும் இப் பிர தேசத்தின் புனிதம் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருக்கின்ற இச் சந் தர்ப்பத்தில் எமது மத்திய அரசின் அர சியல் தலைமைகள் இங்கு ஒரு மீன்பிடித் துறைமுகத்தை அமைப் பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவது எமக்கு சினத்தை ஏற் படுத்துகின்றது.

இலங்கையின் மிகப் பிரபல்யமானதும்இயற்கை துறை முகமுமா கிய மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்தை தமது தேவைக்கும் இராணுவப் பயன்பாட்டிற்கும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் கபட நோக்கில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களை வேறிடத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கும் அவர்களுக்கான வாழ்வாதார செயற்பாடான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்குப் பெயரளவில் ஒரு துறைமுகம் அமைத்துக் கொடுக்க வேண்டியுமே மத்திய அரசு எதுவித கலந்துரையாடல்களோ அல்லது சமூகம் சார் விழிப்புணர்வுகளோ அற்ற நிலையில் கீரிமலைப் பிரதேசத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்ற முயன்றுள்ளது.

இச்செயல் ஒட்டுமொத்த இந்துக்களையும் ஏன் ஏனைய மதத்தவர்களைக் கூட வெறுப்பூட்டக்கூடிய ஒரு செயற்பாடாக அமைந்திருப்பது இங்கு பேசற்பாலது.
இந் நிலையில் எம்மவர்களில் சிலர் தொலைக்காட்சிகளினூடாக ‘ஒப்புக்கு மாரடிக்க’ முயல்வது வேத னைக்குரியது. “புனிதம் கினிதம் என பேசிக் கொண்டிருக்காதீர்கள். இப்பகுதியில் குடியேற்றப்பட்டிருக் கின்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு மீன்பிடித்துறைமுகம் அவசியம்.

எனவே கீரிமலை மீன்பிடித்துறைமுகம் எதுவித மறுதலிப்புக்களும் இன்றி அமைக்கப்பட வேண்டும்” என ஒரு மிகக் கீழ்த்தரமான அறைகூவல் ஒளிபரப்பு, இரண்டொரு நாட்களுக்கு முன் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது என்று எனக்குக் கூறப்பட்டது. மக்களோடு மக்களாக வாழாதவர்கள் இப்பேர்ப் பட்ட பாரிய தவறுகளைச் செய்கின்றார்கள். சரித்திரம் அறியாதவர்கள் இப்பேர்ப்பட்ட தவறுகளை இழைக் கின்றார்கள். தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்காகத் தமது மக்களையே விலை பேசத் துணிகின்றார்கள்.

இப்பேர்ப்பட்டவர்கள் இவ்வாறான கருத்துக்களைக் கூற முயல்வது எவ்வளவு எதிர்மறையான தாக்கங் களை மக்களிடையே ஏற்படுத்தும் என்பதைப்புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு புனிதத் தலம் அல்லது புண்ணிய பூமி அதன் மகத்துவம் சிறிதும் குன்றாமல் பாதுகாக்கப்பட வேண்டியது எம் அனைவரதும் கூட்டுப் பொறுப்பாகும்.

இந்துசமய ஆலயங்களோ அல்லது புனித பூமிகளோ ஆயினும் சரி அல்லது கிறீஸ்தவ, பௌத்த சமயத் தலங்கள் ஆயினும் சரி அவற்றின் புனிதம் எச்சந்தர்ப்பத்திலும் குறைவடையாது பாதுகாக்கப்படல் வேண்டும். அந்த வகையில் கீரிமலை பிரதேசத்தில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை அமைப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும்.

இதனை அரசு நன்கு புரிந்து கொண்டு மாற்றுத் திட்டங்களை முன்வைக்கும் என நம்புகின்றேன். ஒரு பக்கத்தால் மயிலிட்டியை நாம் விடுவிக்கப் போகின்றோம் என்று கூறிக் கொண்டு கீரிமலையில் மீன் பிடித் துறைமுகம் அமைக்க எத்தனிப்பது கரவான கண்ணிய மற்ற செயலாகவே எனக்குப்படுகின்றது என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here