மூதூர் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை; மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

0
207

2016-08-03-05-20-22--1689805522இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைகளில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்த மனித உரிமை கண்காணிப்பகம், மூதூரில் ஏ.சீ.எவ் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நியாயம் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக மூதூரில் 17 ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் கூட்டுமனித படுகொலைக்கு இலக்காகியிருந்தனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ்,

இந்த தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள், குற்றச் செயல்கள் தொடர்பில் விசேட நீதிமன்றமொன்றை அமைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியாயம் வழங்க வேண்டும். குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு பங்களிப்புடன் நீதியான முறையில் விசாரணை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தகுதி தராதரம் பாராட்டாது தண்டிக்கப்பட வேண்டியது அவ சியமானது.

ஏ.சீ.எப் பணியாளர்கள் கொலை குறித்த விசாரணைகளின் நீதி கிடைக்காவிட்டால் யுத்த கால குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதலில் பாரிய குறைபாடு காணப்படுவதாகவே தென்படும். ஏ.சீ.எப் பணியாளர்கள் கொலை குறித்த விசாரணைகள் உரிய முறையில் நடைபெறாமையின் ஊடாக யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப்பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர் கொலை தொடர்பில் பல்வேறு ஆணைக்குழுக்கள் விசாரணை நடத்திய போதிலும் இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜேம்ஸ் ரோஸ் வலியுறுத்தியுள்ளார். நான்கு பெண் கள் உள்ளிட்ட 16 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here