மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் விளங்குகிறது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பகுதி கடந்த சில வருடங்களுக்கு முதல் விடுவிக்கப்பட்டது. எனினும் மக்கள் அங்கு முழுமையாக குடியமர்த்தப்படவில்லை.
ஆடி அமாவாசை தினமான இன்று தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.