இரசாயனம் கலந்த உணவுகளுடன் சந்தேகத்துக்கிடமான ஊசி ஏற்றப்பட்டது:முன்னாள் போராளி!

0
219

sri-lanka-army1புனர்வாழ்வு பெற்ற 105 போராளிகள் இதுவரையில் மரணமடைந்துள்ளனர். மரணத்திற்கான கார ணங்களும் கண்டறியப்பட முடியவில்லை.
நோயினால் மரணமடைவதாக சாதாரணமாக மரண சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து இலங்கையில் பணிபுரியும் சில வைத்தியர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒருவகை ஊசிகளை பரீட்சித்து பார்ப்பதற்காக தடுப்பூசி என்ற போர்வையில் முன்னாள் போராளிகளுக்கு இலங்கை அரசு செலுத்தியுள்ளது என்ற அதிர்ச்சி கரமான தகவலை
தங்களது பெயர்களை வெளியிட வேண்டாம் என்ற உத்தரவாதத்துடன் தெரிவித்தனர்.

அதே நேரம், யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வின் போது தமக்கு இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதோடு சந்தேகத்துக்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் ஒட்டுசுட்டானில் நேற்று நடைபெற்ற மக்கள் கருத் தறியும் அமர்வில் பங்கேற்ற முன் னாள் போராளி ஒருவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கை யில், இறுதிப் போரின்போது பலர் சரணடைந்திருந்தனர். இது தொடர் பாக பல செய்திகள் உள்ளன.

ஆனால் மக்கள் இவ்விடயம் தொடர்பாக கதைக்கப் பயப்படுகின்றார்கள். இதைக் கதைக்கப் போனால் எமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை. தாம் ஒருவரையும் கொல்லவில்லை என்கிறார்கள்.
அவ்வாறாயின் அங்கு சென்றவர்கள் எல்லாம் நஞ்சு அருந்தியா? இறந்தார்கள்.

கோழியைப் பிடித்து சாப்பிட்டவனிடம் எங்கள் கோழியைக் கண்டீரோ என எவ்வாறு கேட்க முடியும். அவன் எங்களிற்கு நீதியைத் தரப்போவதில்லை. எங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் கூட ஏமாற்றி கொண்டு இருக்கிறாங்கள்.

கண்டிப்பா சர்வதேசத்தில் இருந்து நடுநிலமையான நாடுகள் தான் எமக்கு நீதியை வழங்கவேண் டும். நான் ஒரு முன்னாள் போராளி. தடுப்பால வந்த பிறகு நாங்கள் யுத்தங்களை விட்டு ஒதுங்கி இருக்கிறம்.
சொன்னாலும் சொல்லாட்டாலும் எங்களிற்கு இரசாயன உணவுகளைத் தந்திருக்கிறாங்கள் என்பது எங்களிற்கு விளங்குகின்றது.

நான் முன்பு 100 கிலோ தூக்கி எத்தினயோ கிலோமீற்றர் ஓடுற எனக்கு ஒரு பொருளைக்கூட தூக்க முடியவில்லை. கண்பார்வை குறைகின்றது. எங்களிற்கு ஏதோ நடந்திருக் கிறது என்பது மட்டும் விளங்குகின்றது. ஏன் தடுப்பு மருந்து முழுப் பேருக்கும் ஏற்றினவங்கள். ஊசியைக் கொண்டுவந்து போடுவாங்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார். அங்கு என்ன என்ன நடந்தது என்று எங்களிற்கு மட்டும்தான் தெரியும் என்றார் அவர். (4)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here