கே.பி, கருணா மீது நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சர் பொன்சேகா!

0
602

-sarath-fonsekaதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாபன் என்ற கே.பி மற்றும் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்த கருணா ஆகியோர் மீது விசாரணை நடத்தப்படும் என்று இலங்கையின் புதிய பாதுகாப்பு அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்ற நிலையில் நேற்று 25 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் ராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவும் ஒருவர்.

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள பேட்டியில், கே.பி மற்றும் கருணா இருவரும் முக்கிய தீவிரவாதிகள்.

அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கே.பி. மூலமாக விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான டன் கணக்கிலான தங்கம் மற்றும் பெருமளவு பணம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் முந்தைய ராஜபக்சே அரசு, கே.பி. மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து கே.பி., கருணா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here