
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணி வரை மேற்குறித்த செயலணியின் அமர்வு நடைபெற்றது.
இதன் போதே யுத்தத்தினாலும், காணாமல்போதல்கள் உட்பட பல விடயங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளனர். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது எனவும், இனிமேல் யுத்தத்திற்கு இடமில்லை எனவும், நாட்டில் உள்ள சகல மக்களும் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழ் கின்றனர் என கூறிவரும் தற்போதைய அரசாங்கம், தம்மை நல்லிணக்க, நல்லாட்சி அரசு எனவும் அடை யாளப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் இவர்கள் தம்மை இவ்வாறெல்லாம் அடையாளப்படுத்தினாலும் கடந்தகால அரசாங்கங் கள் மேற்கொண்ட தமிழர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசும் சத்தமின்றி எமது பிரதேசங்களில் மேற்கொண்டு வருகின்றது.
என்னதான் இவர்கள் நல்லிணக்கம் பேசினாலும் தமது குறிக்கோள்களை மறைமுகமாக நிறைவேற்றி கொண்டு தான் உள்ளனர்.
தமிழர்களே மட்டும் வாழும் இடங்களில் திடீர் திடீரென புத்தர் சிலைகள் தோன்றுகின்றன, சிங்கள குடியேற் றங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன, சிங்கள கலாசாரங்கள் திணிக்கப்படுகின்றன.
இவை எல்லாமே கடந்த கால அரசுகள் எம்மீது மேற் கொண்ட அழிப்பு நடவடிக்கைகள்தான். இவை தற் போதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
நல்லாட்சி என கூறும் அரசிற்கும், முன்னைய ஆட்சியாளர்களுக்கும் இடையில் பெரியளவில் எந்த வேறு பாடும் இருப்பதாக எமக்கு தெரியவில்லை. ஒரேயொரு வேறுபாடு இருக்கலாம். அதாவது, அவர்கள் இவற்றை எல்லாம் வெளிப்படையாக செய்தார்கள், இவர்கள் எல்லாவற்றையும் மறைமுகமாக செய் கின்றனர்.
இவை ஆபத்தானவை. நாங்கள் நம்பிக்கொண்டு இருக்கும் நிலையில் நம்பிக்கை துரோகம் செய்கின்றனர்.
நாங்கள் இன்றும் வாடகை வீடுகளிலும், முகாம்களிலும் தங்கியிருக்க எமது காணிகளில் தங்கியுள்ள இராணுவம் தோட்டம் செய்து வருமானத்தை ஈட்டி செழிப்புடன் வாழ்ந்து வருகின்றது. இதுவா? இவர்களது நல்லாட்சி? நாங்கள் எமது நிலங்களுக்கு திரும்புவோம் என எதிர்பார்த்திருந்தோம். அது நடக்கவில்லை.
எமது இழப்புக்களுக்கு நீதியை பெற்றுத்தருவார்கள் என எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை.
ஆனால் மாறாக இவை எல்லாம் அதிகரித்த வண்ணமே உள்ளன. எம்மால் இனியும் இவர்களது நடிப்புக்களை நம்ப முடியாது. எமக்கு உண்மைகள் உரிய பொறிமுறைகள் ஊடாக கண்டறியப்பட்டு. இவை உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.