பாப்பரசர் இலங்கை வந்தடைந்தார்: நாளை அரச வங்கி பொது விடுமுறை!

0
409

pope_card1


மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்த பரிசுத்த பாப்பரசரை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மாலை அணிவித்து, பூச்செண்டு வழங்கி வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

pop 2

பரிசுத்த பாப்பரசர் முற்பகல் 9 மணிக்கு வருகை தந்தார். பின்னர் 9.45 வரை அரச வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக கத்தோலிக்க ஊடக நிலையத்தின் பணிப்பார்ள அருட்தந்தை சிறில் காமினி கூறினார்.

4350france

இலங்கையை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் மத மற்றும் அரசியல் நல்லிணக்கம் உள்ள நாடாக காண்பதே தனது அபிப்பிராயம் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த பாப்பரசர், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.pop 1

இதேவேளை, பாப்பரசரின் விஜயம் இலங்கைக்கு பாக்கியம் என கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வரவேற்பு நிகழ்வை அடுத்து பாப்பரசர் திறந்த ரத பவனியாக விசேட வாகனத்தில் கொழும்பு நோக்கி வருகை தருகிறார். பாப்பரசரின் ஆசியை பெறவென கொழும்பு – நீர்கொழும்பு வீதி ஓரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.pop 4

அதன் பின்னர் வாகனத் தொடரணியில் கட்டுநாயக்க, சீதுவை, ஜாஎல, கந்தானை, வத்தளை ,நவலோக சுற்றுவட்டம், ஜப்பான் நட்புறவு பாலம், இங்குறுக்கடை சந்தி, ஆமர் வீ்தி, சங்கராஜ மாவத்தை சந்தி,மருதானை சந்தி, மருதானை வீதி, புஞ்சி பொரளை,பொரளை கனத்தை சுற்றுவட்டம், பொளத்தாலோக மாவத்தை வரை பயணிக்கவுள்ளார்.pop 3

இன்று மாலை ஆறு மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் மதத் தலைவர்களுடன் பரிசுத்த பாப்பரசர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

நாளை  14ஆம் திகதி காலை 8.30 மணிக்கு பாப்பரசர் காலி முகத்திடலில் விசேட திருப்பலி ஆராதனை ஒப்புக் கொடுப்பார்.

pop 5

ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தும் விசேட ஆராதனையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 2.00 மணிக்கு பாப்பரசர் ஹெலிகொப்டர் மூலம் மன்னார் மடு தேவாலயத்துக்கு பயணிப்பார்.  பாப்பரசரை மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வரவேற்று ஆசியுரை வழங்குவார்.

பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை  14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here