பிரான்சில் தன்னிச்சையாக   நடத்தப்படும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி

0
610

tcc_franc_lgoபிரான்சில் லெப். கேணல் விக்ரர் நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி தமது அனுமதி இன்றி தன்னிச்சையாக   நடத்தப் படுவதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு அறிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறையால் கடந்த 12 ஆண்டுகளாக நடாத்தப்பட்டுவந்த லெப். கேணல் விக்ரர் நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை (2016) இவ்வாண்டு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் தன்னிச்சையாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் அனுமதி இன்றி நடைமுறைக்கு முரணாக நடாத்த தீர்மானித்துள்ளது.

இச் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ளாது நிராகரிக்கின்றது என்பதைத் திட்டவட்டமாக அறிவிப்பதுடன் இதனை பிரான்சின் அனைத்து உதைபந்தாட்டக் கழகங்களும் கவனத்தில் கொண்டு செயற்படுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு கேட்டுக் கொள்கின்றது என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்பட்டுள்ளது.
Untitled-4-2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here