கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் செயலணிகளைப் போல் அறிக்கைகளை சேகரித்துவிட்டு காலப்போக்கில் தம்மை கைவிட்டுவிடும் ஒன்றாகவே இதனை பார்ப்பதாக இந்த செயலமர்வில் பங்கேற்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சட்டத்தரணி மனோரி முத்தெட்டு வேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குறித்த குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
விசேட வழக்குத் தொடுநரை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்குதல், உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள் நிகழாமை ஆகியவை தொடர்பான ஆணைக்குழுவை உருவாக்குதல்,
காணாமற்போனோர் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கான நிரந்தர அலுவலகம் ஒன்றை உருவாக்குதல், மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஒன்றை உருவாக்குதல் தொடர்பில் மக்களி டம் கருத்துக்கள் கேட்டறிப்பட்டு வருகின்றன.
இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூருவதற்கான வழி ஒன்றை ஏற்படுத்தி தருமாறு மக்கள் அதிகளவில வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துக்களை தொடர்ந்தும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களையும், அவர்கள் எவ்வாறு செயற்பட்டால் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதையும் தமது கருத்துக்களாக முன்வைத்ததாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.