சங்கானையில் குடும்பஸ்தர் கோரமாக வெட்டிப் படுகொலை!

0
335

imageயாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அராலி கிழக்கு ஐயனார் கோவிலடி பகுதியைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையாரான செல்வரத்தினம் ஞானரத்தினம் (வயது 54) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவத்தினால் அப்பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பு காணப்பட்டதோடு, கொலையை நிகழ்த்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். எனினும் நேற்று இரவு வரை சம்பவம் தொடர்பில் யாரும் கைதாகவில்லை.

குறித்த குடும்பஸ்தர் அராலியில் பலசரக்கு கடையொன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் காலை மேற்படி நபர் சங்கானை சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி வரும் போதே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் அப் பகுதி மக்கள் இருவேறு விதமாக பேசியிவருகின்றனர். எனினும் பொலிஸார் மூலம் அத்தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
பழிவாங்கல் மற்றும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக இக்கொலை சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என பரவலாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இந் நிலையில் மர்மக் கொலைச் சம்பவம் தொடர்பாக வட்டுக் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த கொலை நன்கு திட்டமிடப்பட்ட முறையில் கழுத்தில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டே நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும்,
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எவையும் பொலிஸாரி டம் சிக்கவில்லை.

அத்தோடு வீதியிலி ருந்து நூறு மீற்றர் தொலைவிலேயே சடலமும் இழுத்து செல்லப்பட்டு போடப்பட்டுள் ளது. எனினும் இவர் வயலுக்குள் அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here