தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டமும் நேற்றையதினம் (24.07.2015) ஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் நடைபெற்றது.
கவனயீர்ப்பு நிகழ்விற்கு அருட்தந்தை ஜெரார்ட் அவர்களுடன் வேற்றினமக்களின் அமைப்பு பிரதிநிதிகள், ஸ்ராஸ்பூர்க் நகர பிதாவும் பிரஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர் எறிக் எல்குபி அவர்களும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானமதிப்புக்குரிய திருஅர்னோல்ட்யுங் ,அவர்களின் உதவியாளர், ஸ்ரார்ஸ்பூர்க்ஐரோப்பிய அபிவிருத்திக் குழு உப தலைவி, , கலந்து கொண்டு பிரஞ்சுப்பாராளுமன்றத்திலும் எமது நிரந்தர தீர்வு பற்றி வலியுறுத்துவதாகவும், தேசத்தின் விடுதலைக்காக மக்கள் கலந்து கொண்டதையிட்டும் பாராட்டும்தெரிவித்துச் சென்றிருந்தார்..
இந் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் 1948 இல் இருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கும் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணையே நீதியை பெற்றுத்தருமென பிரான்ஸ் அரசாங்கத்திடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் ஐக்கிய நாடுகள் அவை இடமும் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், தமிழினப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களை காப்பற்றகோரியும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எல்லை கடந்த அரச பயங்கரவாத நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ் மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்தர்கள்.
நிகழ்வில் தமிழினப்படுகொலையை உலக நாடுகள் கண்டுகொள்ள வைப்பதுடன்தமிழினப் படுகொலைக்கான அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான அறைகூவலும் விடப்பட்டது இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு பிரான்ஸ் பத்திரிகையும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.