மட்டக்களப்பு வெல்லாவெளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெட்டி படுகொலை!

0
207

imageமட்­டக்­க­ளப்பு வெல்­லா­வெளிப் பொலிஸ் பிரி­வி­லுள்ள காக்­காச்­சி­வெட்­டையில் பச்­சிளம் குழந்தை உட்­பட ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த மூவர் கடந்த சனிக்­
கி­ழமை இரவு வெட்டி கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.
இதில் பச்­சிளம் குழந்­தை­யான லக்­சிகா அவ­ரது தாயான விஜித்தா மற்றும் விஜித்­தாவின் தந்தை ஆகிய மூவரே கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக
வெல்­லா­வெளி பொலிஸார் தெரி­வித்­தனர்.
மனை­வியும் குழந்­தையும் வீட்டில் உறங்கிக் கொண்­டி­ருந்த வேளையில் சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு வீட்­டிற்குள் புகுந்த விஜித்­தாவின் கண­வ­ரான எம்.பிரசாந் (வயது 34) விஜித்­தா­வை­யும (வயது 24) அவ­ரது ஒன்­றரை வயதுக் குழந்­தை­யையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்­றுக்குள் வீசி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
இந்த நேரம் அயல் வீட்டில் உறங்கிக் கொண்­டி­ருந்த விஜித்­தாவின் தந்­தை­யான 56 வய­து­டை­ய ­கந்­தையா பேரின்பம் தனது மகள் விஜித்­தா­வி­னதும் பேரக்­கு­ழந்­தை­யான லக்­சி­கா­வி­னதும் அழும் சத்தம் கேட்டு அங்கு ஓடி­வந்த போது கொலை­யா­ளி­யான தனது மரு­மகன் பிரசாந்த் மாமனார் கந்­தை­யா­வையும் தாக்­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
வெட்­டு­கா­யங்­க­ளுக்கு உள்­ளான விஜித்­தாவின் தந்தை பேரின்பம் களு­வாஞ்­சிக்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பப்­பட்­ட­போது சிகிச்சை பல­னின்றி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை உயி­ரி­ழந்­துள்ளார். சம்­பவம் இடம்­பெற்ற வீட்­டுக்குச் சென்ற களு­வாஞ்­சி­குடி சுற்­றுலா நீதி­மன்ற நீதி­பதி எம்.ஐ.றிஸ்வி ஸ்த்தளத்தில் விசா­ர­ணை­களை மேற் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here