யாழ் காங்கேசன்துறை வீதி, இணுவில் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இணுவில், திரையரங்கு வீதியைச் சேர்ந்த இளையதம்பி செல்வராசா (வயது 60) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
இணுவில் பகுதியில் மஞ்சள் கடவையைக் கடந்து சென்ற மேற்படி முதியவரை, உந்துருளி மோதியதில் படுகாயமடைந்து, முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு உயிரிழந்தார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் முதியவருக்கு நீண்ட நேரமாக எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் இருந்தமையே அவர் உயிரிழந்தமைக்குக் காரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி என்.பிறேம்குமாருக்கு முதியவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.