கீரிமலையில் மீன்பிடி இறங்குதுறை அமைப்பதை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு!

0
176

imageகீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் மீன் பிடி இறங்குதுறை அமைப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி இந்து சமய அமைப்புக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து கீரிமலை நகுலேஸ்வர ஆலய முன்றலில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத் துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் இந்துக்களினதும் தமிழர்களினதும் புண்ணிய பூமியாக விளங்குகின்ற கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் இலங்கை கடற்படையினரால் மீன்பிடி இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இறங்குதுறை அமைக்கப்பட்டு தொழிற்படுமாயின் கீரிமலை கடற்கரையில் இடம்பெறுகின்ற அனைத்து புண்ணிய காரி யங்களும் மாசுபடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும்.
அதாவது கண்டகி தீர்த்த கரையில் இடம்பெறும் மகாசிவராத்திரி தீர்த்தம், ஆடி அமாவாசை தீர்த்தம் மற்றும் நாளாந்தம் பெருமளவு மக்கள் தமது இறந்தவர்களின் ஆத்ம சாந்தி நிகழ்வுகளான அந்தியேட்டி மற்றும் பிதிர்கடன் நிகழ்வுகள் என்பன இறங்குதுறையின் செயற்பாட்டினால் மாசுபடும் சூழ்நிலை உருவாகும்.

ஆகவே உடனடியாக இறங்குதுறை அமைப்பதை நிறுத்தி சைவத் தமிழ் மக்களின் புனித பிரதேசத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததோடு இது தொடர்பாக எமது எதிர்ப்பை இவ்வாறு ஒரு சிறு போராட்டம் ஊடாக வெளிப் படுத்துகிறோம்.

எனினும் இறங்குதுறை அமைப்பதை உடனடியாக நிறுத்தாவிடின் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபொது மக்கள் எச்சரித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு காங் கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் வருகை தந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்குறித்த விடயம் தொடர்பாக மகஜர் ஒன்றினை அவரிடம் கையளித் திருந்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட அவர் நியாயமான முறையில் இந்த பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். அது வரை அமைதியாக இருக்கும்படி தெரிவித்ததுடன் போராட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைய அவ் இடத்தை விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here