தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தியும் 33 ஆண்டுகளாகத் தொடரும் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் கறுப்பு ஜூலை நீங்காத நினைவுகளோடு 23.07.2016 அன்று சனிக்கிழமை, 10.00 மணியளவில் இருந்து Århus Rådhuspladsen கவனயீப்பு போராட்டம் நடைபெற்றன.
இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ் மக்கள் தமது ஆன்மாவில் உரம் ஏற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட யூலை இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த வருடத்துடன் 33 ஆண்டுகள் ஓடிவிட்டன.