சிறிலங்கா இனவெறிக் காடையர்களினால் 1983 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை 23 தமிழினப் படுகொலையின் 33 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சின் பாரிசில் உள்ள மனித உரிமை நினைவுச் சதுக்கம் அமைந்துள்ள Trocadéro பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு கறுப்பு உடையணிந்து மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கறுப்பு யூலை தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன. பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் கவனயீர்ப்பு நிறைவடைந்தது.
(ஊடகப்பிரிவு- பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)