யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

0
170

1469258431_download (5)கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 9 மாகாணங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் உள்ளக மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவில்லையென யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் அறிவித்துள்ள நிலையில் அந்த வெற்றிடங்களுக்கு தம்மை இணைத்துக் கொள்ளுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பட்டம் பெற்ற வருடத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல், பட்டதாரிகளை வேலைக்கு இணைத்துக் கொள்வதற்கான வயது எல்லையை 45 ஆக அதிகரித்தல், 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலையில்லா பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுதல்,

 பட்டதாரிகளுக்கான 55 ஆயிரம் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தல், தகவல் உத்தியோகஸ்தர்களாக வேலையில்லா பட்டதாரிகளை இணை த்துக்கொள்ளு தல், சகல மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வெற்றிடங்களை பூர்த்தி செய்தல், மற்றும் ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கு மாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி யுள்ள னர்.
குறித்த கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here