பிரான்சில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த கரம் மற்றும் சதுரங்க போட்டிகள் 2015

0
263


IMGP0517IMGP0539பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நாடாத்தி வரும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த அனைத்து போட்டிகளின் முதல் நிகழ்வாக கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் 11.01.2015 ஞாயிற்றுக்கிழமை  பிரான்சின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான நந்தியார் என்னும் பிரதேசத்தில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றன.

IMGP0471

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டுத்துறையின் உதவிப் பொறுப்பாளர் திரு. மகேசு அவர்கள் ஏற்றி வைக்க,  2008 ம் ஆண்டு இலங்கை இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அகமகனின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.

IMGP0474

மாவீரர்களுக்கும், மக்களுக்கும், அண்மையில் பிரான்சில் சாவடைந்த நாட்டுப்பற்றாளரும், 95 விளையாட்டுக்கழக முக்கியமானவர்களில் ஒருவரான மா. ஜெயசோதி அவர்களையும், தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் மெய்வல்லுநர் போட்டியின் உதவி முகாமையாளர் திரு.பீலிக்ஸ் அவர்களின் துணைவியார் அமரர் . ஜெயசீலி அவர்களையும், கடந்த 8ம் திகதி பாரிசில் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சார்லே  பத்திரிகை நிருபர்களுக்கும், பிரான்சு நாட்டின் காவல்துறையினருக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

IMGP0526

அதனைத் தொடர்ந்து போட்டிகள் பற்றியும், ஒழுங்கு விதிமுறைகள் பற்றியும் தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுநர் போட்டிகளின் முகாமையாளர் திரு. இராஜலிங்கம் அவர்கள் தெரியப்படுத்தியிருந்தார்.IMGP0525

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்களில் இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெற்றியை தமதாக்குவதற்காக போட்டியிட்டனர். மாலை 6.15 மணிவரை நடைபெற்ற போட்டிகளில் 205 போட்டியாளர் பங்கு பற்றியிருந்தனர்.IMGP0528

இப்போட்டியில் இந்த வருடம் தமிழர் விளையாட்டுக்கழகம் – 93, தமிழர் விளையாட்டுக்கழகம்- 94, தமிழர் விளையாட்டுக்கழகம்- 95, நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம், ஈழவர் விளையாட்டுக்கழகம், யாழ்டன் விளையாட்டுக்கழகம், பாடுமீன் விளையாட்டுக் கழகம், அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் போட்டியிட்டன.IMGP0490

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here