இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிட உள்ள ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான யுத்தத்தின் போதுஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு போதுமானதல்ல என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகில் ஏற்படும் வன்முறைகளுக்கான மூல காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதவி வகிக்கும் காலத்திற்கு முன்னதாகவே இலங்கையில் யுத்தம் நிறைவடைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.