அம்பாறை பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏத்தம் குஞ்சான் ஓடைப்பாலத்தின் அருகில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த குடும்பமொன்று பயணித்த மோட்டார் சைக்கில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதியே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில்35வயதுடைய ரி.ஜெயந்திரன் மற்றும்9வயதுடைய ஜெ.கஜே எனும் சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த குடும்பம் திருக்கோவில்பிரதேசத்திலிருந்து ஆலயம் ஒன்றிற்கு பயணித்துக் கொண்டிருக்கும் போது முன்னால் வந்த வாகனமொன்றிற்கு வழிவிட முயற்சித்துள்ளது. இதன் போதே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிறுவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன்மோட்டார் சைக்கிளை செலுத்திய சிறுவனின் தந்தையும் 28வயதுடைய தாயும் 3 வயது பெண் குழந்தையும்பலத்த காயங்களுக்குள்ளாகினர்.
இந்நிலையில் படுகாயமடைந்த மூவரும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
எனினும் சிகிச்சை பலனின்றி தந்தையும்அம்பாறை வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பொத்துவில் வைத்தியசாலையிலும் தந்தையின் சடலம் அம்பாறை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொத்துவில் பொலி ஸார் ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்து உயிரி ழந்த நபர் இரு மாதங்களுக்கு முன்னரே வெளிநாடொன்றில் தொழில் புரிந்து விட்டு நாட்டிற்கு வருகை தந்தமை குறிப் பிடத்தக்கதாகும்.
Close