பிரான்சின் நைஸ் நகர தாக்குதலில் பலியான நபர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே என பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் நைஸ் நகரில் கடந்த 14ம் திகதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது லொறியை செலுத்தியதில் இதுவரையிலும் 84 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 70க்கும் அதிகமான நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்களில் 19 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் பலியான நபர்களில் பாதி பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அல்ஜீரியா, ஜேர்மனி, பெல்ஜியம், பிரேசில், அமெரிக்கா, இத்தாலி, கஜகஸ்தான், மடகாஸ்கர், போலந்து, ருமேனியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, துனிஷியா, துருக்கி, மொராக்கோ, உக்ரைன், அர்மீனியா, எஸ்டோனியா, ஜார்ஜியா உட்பட 29 நாடுகளை சேர்ந்த நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சோகமான நிகழ்வாக கர்ப்பிணி மனைவியை காப்பாற்ற சென்ற கணவர் உயிரிழந்துள்ளார், சுற்றுலாவுக்கு வந்த குடும்பத்தினர் அனைவரும் பலியாகியுள்ளனர், போலந்து நாட்டிலிருந்து சுற்றுலாவுக்கு வந்த சகோதரிகள் இருவரும் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நைஸ் நகரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ள போதும், இன்னும் மக்கள் தாக்குதலின் அச்சத்திலிருந்து மீளவில்லை.