யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட மூவரை கைது செய்ய உத்தரவு!

0
141

arrestயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன்படி நேற்றையதினம் மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு முயன்றுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மோதல் சம்பவத்தினை அடுத்து மாணவர்கள் சிலரை விசாரணைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு நேற்றைய தினம் வருகை தருமாறு பொலிஸார் தெரிவித்திருந்ததாகவும் ஆனால் தாம் செல்லவில்லை எனவும் மாணவர் ஒன்றிய பிரதிநிதி ஒருவர் வலம்புரியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்துள்ளதாகவும் அந்த பிரதிநிதி எம்மிடம் தெரிவித்துள்ளார். எனினும் மாணவ ஒன்றியத் தலைவர் கைது செய்யப்படும் பட்சத்தில் தாம் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

மோதலில் காயமடைந்த சிங்கள மாணவன் ஒருவர் கொழும்பு வைத்தியசாலையில் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையி லேயே மாணவர் ஒன்றிய தலைவரை, பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் போது வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நட னம் மூலம் மாணவர்களை தாமும் வரவேற்க வேண்டும் எனவும் முரண்பட்டனர். எனினும் தமிழ் மரபுப்படி மாணவர்கள் அழைத்து வரப்பட்ட வேளை,

திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சிங் கள மாணவர்கள் கண்டிய நடனத்தை அங்கு கொண்டுவந்து ஆடினார்கள். இதனால் ஆத்திரமடைந்த தமிழ் மாணவர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றியும், நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்கு மாறாக எவ்வாறு கண்டி நடனம் கொண்டுவரப்பட்டது என சிங்கள மாணவர்களிடம் கேட்டனர். இதன்போது வாக்குவாதம் முறுகல் நிலைக்கு செல்ல இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பு மாணவர்களையும் சமரசத்திற்கு கொண்டுவர முயன்ற போது, திடீரென சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தாக்கப்பட்டார். அதனை தொடர்ந்து பீடாதிபதியும் தாக்கப்பட்டார். இந்த சம்பவங்களை அடுத்து இருதரப்பு மாணவர்களும் கற்களாலும், கொட்டன்களாலும் தாக்குதலில் ஈடுபட, பல்கலைக்கழகமே கலவர பூமியாக காணப்பட்டது.

இதன் காரணமாக பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர், பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்றைய தினம் பொலிசாரின் புலனாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்று உள்ளதாகவும் அதில் ஒருசில தமிழ் மாணவ தரப்பே தவறிழைத்தது எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பாக மாணவர் ஒன்றிய தலைவரே பிரச்சினைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டு குறித்த மாணவன் உட்பட மூவரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

எனினும் நேற்று நள்ளிரவு வரை குறித்த மாணவன் கைது செய்யப்படவில்லை. எனினும் மாணவனை கைது செய்வதற்கான முயற்சிகள் பொலிஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை மாணவனை பல்கலை நிர்வாகம் பொறுப்பேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும் முயற்சிகளும்; இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகின்றது.

இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பியை தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்த மாணவரும் நேற்று வரை கைது செய்யப்படவில்லை எனக்கூறினார்.
மாணவர்கள் கைது நடவடிக்கை தொடர்பில் அவசர நடவடிக்கைகள் எதுவும் வேண்டாம் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றிரவு அவசரமாக கோரியுள்ளதாகவும் அறிய முடிகிறது. (செ-4)
2016-07-20 11:01:49

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன்படி நேற்றையதினம் மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு முயன்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here