யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை ஆரம்பம்!

0
204

10932

மருத்துவ பீட மாணவர்களுக்கும் சித்த மருத்துவ அலகு மாணவர்களுக்கும் மருத்துவ பயிற்சியும் மருத்துவ பீட விவசாய பீட பரீட்சைகளும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் ஏனைய கல்விச் செயற்பா டுகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபபிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

2011ஆம் ஆண்டு தொடக்கம் மூவின மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றார்கள். சிறு சிறு அசம்பாவிதங்கள் ஏற்படுவதுண்டு அதேபோன்ற நிகழ்வுதான் கடந்த 16ஆம் திகதியும் ஏற்பட்டது. இரு குழு க்களுக்கிடையே நடந்த அசம்பாவிதத்தை பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோரின் அனுசரணையுடன் குறித்த சம்பவத்தை ஒரு மணித்தியாலத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியதாக இருந்தது.

இருப்பினும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடமைகளின் பாதுகாப்பு கருதியும் நாளை (இன்று) விடுமுறை என்ற காரணத்தினால் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைக்க தீர்மானித்திரு ந்தோம்.

குறித்த சம்பவம் தொடர்பாக மாணவர் ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாணவ ஆலோ சகர்களுடன் கலந்துரையாடியிருந்தேன். இனிவரும் காலங்களில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் தாம் பார்த்து கொள்வதாகவும் தமது ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும் எனவும் தெரிவித்தனர். இதேவேளை பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களுடனும் பீடாதிபதிகள் விரிவுரையாளர்களுடனும் இதைப்பற்றி கலந்துரையா டினோம். மிக விரைவில் கல்வி நடவடிக் கைகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவி த்துள்ளார்கள்.

எல்லா இன மாணவர்களும் இதுவரை காலமும் ஒன்றாக இருந்து சுமுகமாக கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு பட்டங்களை பெற் றுச் சென்றுள்ளார்கள். அவ்வாறான ஒரு நிலை தொடர்ந்தும் இருக்கும் என்ற நம் பிக்கை எமக்குள்ளது.

உடனடியாக நாம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து இந்த மோதலை தூண்டியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம்.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களிடையே இங்கு கல்வி பயில்வதற்க்கு ஏதுவான சூழ்நிலை முன்பு போல உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடமை எமக்கு உள் ளது.

இங்கு இருப்பவர்களுக்கு தெரியும் இது சாதாரண பிரச்சினை என்று. ஆனால் வெளிமாவட்டங்களில் உள்ளவர்களுக்கு சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றை தீர்ப்பதற்கு விஞ்ஞான பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்களும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர் கள் இதற்காக ஒன்று கூடி கலந்துரையாடியிருந்தோம். அக் கலந்துரையாடலில் நாளை 20ஆம் திகதி மருத்துவ பீட மாணவர்களுக்கும் சித்த மருத்துவ அலகு மாணவர்களுக்கும் மருத்துவ பயிற்சியை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.அது தவிர மருத்துவ பீட விவசாய பீட பரீட்சைகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம் அதன் பின்னர் படிப்படியாக அனைத்து பீட கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளோம். அத்துடன் உயர் பட்ட படிப்பு பீடத்தில் நடைபெறும் விரிவுரைகளும் தொடர்ந்து நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here