காணாமல்போன உறவுகளை தேடித் தேடி நாம் அலுத்துவிட்டோம். தற்போது அந்த விடயம் கானல் நீராகின்றது என தனது மகனைத் தொலைத்த மன்னாரைச்சேர்ந்த தாயொருவர் கண்ணீருடன் ஆதங்கத்தை வெளியிட்டார்.
அத்தோடு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வேண்டாமென நாம் வெளிவிவகார அமைச்சரிடத்தில் கூறியபோதும் எமது தலைமைகளிடம் கேட்டே அச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக
கூறுகின்றார்.
எமக்கு வேண்டாத விடயத்தை
நீங்கள் ஏன் ஏற்றுக்கொண்டீர்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.
தடம்மாறுகிறாதா தமிழ்த்தேசியம் எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வு நிலை, கருத்துப்பகிர்வு உறவாடல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது காணாமல்போனவர்களின் உறவுகள் சார்பாக தனது கருத்தை முன்வைக்கையிலேயே அத்தாயார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் எனது மகனைத்தொலைத்து விட்டு நீண்ட காலமாக தேடிக்கொண்டிருக்கின்றேன். கொண்டு சென்றவர்கள் யார் என்பது கூட எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
தேர்தல் காலத்தில் காணாமல்போன எமது பிள்ளைகள் எங்கே போனார்கள் என்பதை கண்டுபிடித்து தருவதாக கூறினார்கள். நாம் அனைவரும் அதனை நம்பியே வாக்களித்தோம். ஆனால் இன்று அனைத்துமே கானல் நீராகிக்கொண்டிருக்கின்றது.
நான் உள்ளிட்ட எத்தனையோ பெண்கள் மகனை, கணவனை தேடி அலைந்து களைத்துவிட்டோம். எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கூறமுடியாதிருப்பதாக இங்கு பேசியவர் கூறுகின்றார். நாம் எமது உறவுகள் உயிர்நீத்து விட்டார்கள் என்பதை கூட ஏற்றுக்கொள்ள தயாரான நிலையில் இருக்கின்றோம். எமது உறவுகள் உயிர் பிரிந்
திருந்தால் அவர்களுக்குரிய அஞ்சலியைத் செலுத்தி படமொன்றை மாட்டி மாலை இடுவதற்காகவே கேட்கின்றேன். தயவு செய்து எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கூறிவிடுங்கள்.
அண்மையில் நான் உட்பட காணாமல்போனவர்களின் உறவினர்கள் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்திருந்தோம். அதன்போது காணாமலாக்கப்பட்டவர்களுக்காக பிரதமர் அலுவலகத்தில் ஒரு அலுவலகம் அமைக்கப்படுவதாக கூறினார்கள். நாங்கள் அந்த அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர்களிடத்தில் கூறினோம். இதன்போது உங்களது தலைவரும் இணங்கிக்கொண்டதன் பின்னர் தான் அலுவலகத்தை அமைக்கின்றோம் எனக் கூறுகின்றார்கள். நாம் விரும்பாதவொன்றை எவ்வாறு தலைவர்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.
தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள். எத்தனையோ துன்பங்களை சந்திக்கின் றோம். எமக்கு வழங்கப்படும் உதவிப்பணம் கூட முறையாக கிடைப்பதில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்றே கேட் கின்றோம். தொடர்ந்தும் தாமதிக்காது ஒரு பதில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் என கண்ணீருடன் கோரினார்.
Close