கண்டிய நடனம் இராணுவ ஏற்பாடு:சுரேஷ் பிரேமச்சந்திரன்!

0
189

suresh_premachandran_1யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் ஆட வேண்டும் என கோரும் சிங்கள மாணவர்கள், ருகுணு பல்கலைக்கழகத்தி லும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ். பல்கலைக்கழகத்தில் இராணுவத்தின் துணையுடனேயே கண்டிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை ஒன்பது மணிமுதல் பிற்பகல் ஆறு மணிவரை ‘தடம்மாறுகிறதா தமிழ்த்தேசியம்’ எனும் தொனிப்பொருளிலான கருத்தாய்வு நிலை கருத்துபகிர்வுறவாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்;

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நல்லாட்சி அரசை குழப்ப வேண்டாம் எனவும், பொறுமை காக்கும் படியும் எமது அரசியல் தலைமைகளால் தொடர்ச்சியாக எம்மிடம் கூறப்பட்டு வருகின்றது. நாமும் கடந்த காலங்களில் பொறுமை காத்து வந்தோம். ஆனால் எம்மால் ஆட்சிக்கு வந்த அரசே தற்போது பௌத்த மயமாக்கலையும், இராணுவ மயமாக்கலையும் மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் நாங்கள் பொறுமை காக்க முடியாது. ஏனென்றால், எம்மால் கொண்டுவரப்பட்ட அரசு எமக்கு எதிராகவே செயற்பட ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் எமது மக்களை அன்னச்சினத்திற்கு வாக்களிக்க கோரிய எமது கூட்டமைப்பு அரசுடன் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பேசியதாக எமக்கு தெரியவில்லை.

திருகோணமலை சாம்பல் தீவு, நயினாதீவு, முல்லைத்து உட்பட வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகளை இராணுவத்தின் துணையுடன் வைத்து வருவதோடு, சிங்கள குடியேற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு போனால் எமது தேசம் முழுமையாக சிங்களமயமாக்கப்பட்டு விடும். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றுள்ளது.

வரவேற்பு நிகழ்வில் கண்டிய நடனம் வேண்டும் என கூறி சிங்கள மாணவர்களால் கண்டிய நடனம் அரங்கேற்றப்பட்டது. அதனை தட்டிக்கேட்ட தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னரே கலவரம் வெடித்துள்ளது. தமிழ் மக்களுடைய ஒரே ஒரு அறிவியல் சொத்தாக உள்ள யாழ்.பல்கலைக்கழகத்தில் வளமைக்கு மாறாக கண்டிய நடனத்தை கோரும்,

சிங்கள மாணவர்கள் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா? யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் அரங்கேற்றுவதற்கான உபகரணங்கள் எங்கிருந்து வந்தன? அவற்றை இராணுவமே திட்டமிட்டு வழங்கியிருந்தது. என அவர் மேலும் தெரிவித்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here