கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஒன்பதரை அடியில் பிரமாண்ட சிலையை நிறுவத் திட்டமிட்டுள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் என்ற பதவி எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. இதை நினைவு கூரும் வகையில் எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்க விஏஓக்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ஒன்பதரை அடியில் வெண்கலத்தில் இந்த முழு உருவச் சிலை அமைக்கப்படவுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பதவியினை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த தினமான 17.01.2017 அன்று எம்.ஜி.ஆரின் 9.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நிறுவப்படுகிறது.
1989-ல் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியை ஒழிக்க நினைத்த பாரதி அறிக்கையில் இருந்து பாதுகாத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த சிலையை திறக்க அழைப்பு விடுத்து இருக்கிறோம் என்றார் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர்.