பிரான்சின் நைஸ் நகர தாக்குதலுக்கு பொலிசார் மெத்தனமாக செயல்பட்டது தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரான்சில் உள்ள நைஸ் நகரில் தாக்குதல் நடத்தியவன் ஐஸ்கிரீம் கொண்டு செல்வதாக கூறி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பொதுவாக முக்கியமாக கருதப்படும் விழாக்களின் போது, அவ்விழாக்கள் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் அனுப்பப்படும், ஆனால் நேற்று நடந்த கொண்டாட்டத்தின் போது லொறி எவ்வாறு உள்ளே வந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி நேற்று தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து கனரக வாகனங்கள் அனைத்தும் மாலை முதலே வழி மாற்றி அனுப்பப்பட்டன, ஆனால் தாக்குதல் நடத்த வந்தவன் கடற்கரைக்கு ஐஸ்கிரீம் கொண்டுசெல்வதாக கூறி உள்ளே சென்றுள்ளான், பொலிசார் முறையாக சோதனை நடத்தியிருந்தால் இச்சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். இதற்கு பொலிஸாரின் அஜாக்கிரதை தான் காரணம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதி மனைவியிடம் விசாரணை
தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகமது வின் முன்னாள் மனைவியை பொலிசார் கைது செய்து அவரிடம் முகமது யார், அவன் பின்னால் யாரேனும் உள்ளார்களா, மனைவிக்கு இச்சம்பவத்தில் தொடர்பு ஏதும் உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தாக்குதல் நடந்த போது லொறியில் இருந்து ஒருவர் தப்பியோடியதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது, அது குறித்தும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐவர் கைது
தாக்குதல் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.