நாட்டுப்பற்றாளர் துரைரத்தினம் முரளிகரன் அவர்களுக்கு எமது வீரவணக்கம் – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு –- பிரான்சு

0
353

murali canada

கியூப்பெக் மாநில தமிழ்த்தேசிய செயற்பாட்டின் தலைமையாளர் நாட்டுப்பற்றாளர்
துரைரத்தினம் முரளிகரன் ( முரளி ) அவர்களுக்கு எமது வீரவணக்கத்தைத்
செலுத்துகின்றோம்.

தமிழீழ தாயகத்தில் புலோலியை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ் உணர்வோடும்,
தாயகவிடுதலை உணர்வோடும் வளர்ந்து, விடுதலைக்கான பணியில் முளைவிடும் போது தாய்
மண்ணில் உயிர்வாழ முடியாததொரு சூழ்நிலையில் 1992 ம் ஆண்டில் கனடா நாட்டிற்கு புலம்
பெயர வேண்டிய சூழ்நிலைக்கு உள்பட்டிருந்ததோடு மட்டுமல்லாது சாவடையும் வரை சற்றேனும்
தளர்வடையாது தன்னால் முடிந்த பணியை ஆற்றியவர் நாட்டுப்பற்றாளர் என்ற தமிழீழ தேச உயர்
மதிப்பளித்தலைப் பெற்றுக் கொண்ட துரைரத்தினம் முரளிகரன் ( முரளி) அவர்களாவர்.
“ எமது சுதந்திரத்தை நாமே போராடி வென்றெடுக்கும் மனோதிடம், நம்பிக்கையும்,
உறுதிப்பாடும் எங்களிடம் உண்டு ’’. என்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின்
சிந்தனைக்கமைய வாழ்ந்து அர்ப்பணிப்போடு அல்லும், பகலும், அயராது தன்னலங்கருதாது
பொதுநலச்சிந்தனையுடன் வாழ்ந்தவர் தான் நாட்டுப்பற்றாளர் முரளிகரன் அவர்கள். இத்துடன்
நின்று விடாது எமது நாளைய தலைமுறை தாய்மண், தாய்மொழி, தாயகவிடுதலை உணர்வோடு
நேர்த்தியாக வளர்த்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, அயராது உழைத்தவர் தனது 49 வது
அகவையில் சாவடைந்ததானது எமது இனத்துக்கும், தேசியத்திற்குமோர் பேரிழப்பாகும்.
இவரின் இழப்பால் வேதனையுற்றிருக்கும் இவரின் துணைவி, பிள்ளைகள் குடும்பத்தினர்,
தேசியச் செயற்பாட்டாளர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் மற்றும் கனடாவாழ்
தமிழ்மக்களுடன் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப
கட்டமைப்புகளும் துயரினைப் பகிர்ந்து கொள்வ தோடு, எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக்
கொள்கின்றோம்.

“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு –- பிரான்சு

Karan Canada PDF (2) copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here