பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்து ஊடகமொன்று எழுப்பியகேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவத்துள்ளார்.
இலங்கைக்கும் சில சர்வதேச நாடுகளுக்கும் இடையில் உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு கூறுதல் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையில் சில விடயங்களில் இடைவெளி காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர்,இந்த விடயங்களை இலங்கை அரசாங்கம் கவனித்து செயற்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.