மேல்­நீ­தி­மன்­றத்­திற்கு மாற்­றப்­படும் நிலையில் வித்­தியா வழக்கு!

0
471

vithபுங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான வித்­தியா தொடர்­பான வழக்கு விசா­ர­ணையில் இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட சகல விசா­ரணை அறிக்­கை­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் சமர்­ப் பித்­துள்­ள­தாக குற்­றப்­பு­ல­னாய்வு அதி­காரி மன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.
இதே­வேளை குறித்த வழக்கை மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கையை சட்­ட­மா­திபர் திணைக்­களம் மேற்­கொள்ளும் என ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் தெரி­வித்­துள்ளார்.
குறித்த மாணவி படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் அது தொடர்­பான வழக்கு விசா­ரணை நேற்­றைய தினம் விசா­ர­ணைக்­காக எடுத்­து­கொள்­ளப்­பட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டது.
வழக்கு விசா­ர­ணையின் போது மன்றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த குற்­றப்­பு­ல­னாய்வு பொலிஸ் அதி­காரி, படு­கொலை செய்­யப்­பட்ட குறித்த மாணவி தொடர்­பாக இது­வரை மேற்­கொண்­டி­ருந்த விசா­ர­ணைகள் தொடர்­பாக அனைத்து அறிக்­கை­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைத்­துள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார்.
இதே­வேளை, குறித்த கொலை­வ­ழக்கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­களின் வாக்­கு­மூல அறிக்கை நீதி­மன்ற பாது­காப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அதனை ஆராய்­வ­தற்கு வழங்­கு­மாறு குற்றப் பிரிவு அதி­கா­ரிகள் நீதி­வா­னிடம் கோரிக்கை முன்­வைத்­தி­ருந்­தனர். இதன்­போது குறித்த வாக்­கு­மூல ஆவ­ணங்கள் சட்­டமா அதி­ப­ரி­ட­மி­ருந்து கோரப்­ப­டு­கின்ற போதே அதனை வழங்க முடியும் என தெரி­வித்து குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரியின் கோரிக்­கையை நீதிவான் நிரா­க­ரித்­தி­ருந்தார்.
மேலும் குறித்த வழக்கு தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­யினால் மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த மர­பணு அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பாக சந்­தேக நபர்கள் சிலர் மன்றில் கோரிக்கை முன்­வைத்­தனர். இதன்­போது, குறித்த மர­பணு அறிக்கை தொடர்பில் தெரி­விக்க வேண்­டிய நேரத்தில் தெரி­விக்க வேண்­டிய இடத்தில் தெரி­விக்­கப்­படும். எனவே அது தொடர்பில் தற்­போது எதுவும் தெரி­விக்க முடி­யாது என நீதிவான் தெரி­வித்­தி­ருந்தார்.
இதே­வேளை, வித்­தி­யாவின் குடும்­பத்தின் பதிவு காணப்­பட்ட புங்­கு­டு­தீவு தென்­கி­ழக்கு ஜே–24 கிரா­மத்தின் கிராம சேவகர் மன்றில் முன்­னி­லை­யாகி குறித்த பகு­தி­யி­லுள்ள குடும்­பங்­களின் விப­ரங்­களை தர­வு­க­ளாக சமர்ப்­பித்­தி­ருந்தார். இதன்­படி வித்­தி­யாவின் படு­கொலை இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் 30 குடும்­பங்கள் அப்­ப­கு­தியில் வசித்து வந்­தி­ருந்த நிலையில் அச் சம்­ப­வத்தின் பின்னர் 31குடும்­பங்கள் வசித்துவரு­வ­தாக அத்­த­ரவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேலும் படு­கொலைச் சம்­பவம் இடம்­பெற்­றதன் பிற்­பா­டான காலப்­ப­கு­தியில் இரு குடும்­பங்கள் வெளி­யே­றி­யுள்ள போதும் அவர்­களின் பதி­வுகள் குறித்த கிராம சேவகர் பிரிவில் தொடர்ந்து காணப்படுவதாக கிராம சேவகர் அறிக்கையில் குறிப்பிட்டி ருந்தார்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அது வரை சந்தேகநபர்களை விளக்கமறிய லில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here