புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் தமிழர் விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை 9.07.2016 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது .
இவ் விளையாட்டு விழாவில் வெளிவாரியான மாணவர்களையும் உள்ளடக்கிய பேர்லின் தமிழாலயத்தின் இல்லங்களுக்கு இடையான மெய்வல்லுனர் போட்டி , தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் தமிழீழ வெற்றிக்கிண்ணத்துக்கான 13 வயது – 16 வயது , மேற்பிரிவு ஆகியவர்களுக்கான உதைப்பந்தாட்டம் , கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல் என பல்வேறு விளையாட்டுக்கள் சிறப்பாக நடைபெற்றது.
இவ் தமிழர் விளையாட்டு விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது பிள்ளைகளை ஊக்கிவித்தது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்ததோடு , இப் போட்டியில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்கள் /வீராங்கனைகள் அனைவரும் மிக திறமையானவர்களாக திகழ்ந்தார்கள் .
இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் ,இல்லங்களுக்கும், உதைப்பந்தாட்ட கழகங்களுக்கும் சான்றிதள்களும் பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
எதிர்வரும் சனிக்கிழமை 16.07.2016 அன்று காலை 9 மணிக்கு மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.