தமிழர் விளையாட்டுத்துறை – பிரான்சு விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

0
270

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத் துறையினரால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் இறுதிப்போட்டியில் உதைபந்தாட்ட இறுதியாட்டம் இம்முறை தவிர்க்க முடியாத காரணங்களினால் நடைபெறமாட்டாது என்பதைத் தெரியப்படுத்துகின்றோம்.

ஈழத் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளன நிர்வாகத்தின் யாப்பு விதியை மீறிய நடவடிக்கைகளால் தமிழர் விளையாட்டுத்துறை மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டியை நிறுத்தும்படி கேட்டிருந்தது. ஆனால், அதனை மீறி தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் அப்போட்டியை நடத்தியதை தமிழர் விளையாட்டுத்துறை தான் பொறுப்பேற்க மாட்டாது என அண்மையில் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

தற்பொழுது குறுந்தகவல்கள் ஊடாக மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் இறுதிப்போட்டியில் உதைபந்தாட்ட இறுதிப்போட்டி நடைபெறும் என்ற அறிவித்தல் வெளிவந்துள்ளது. ஆனால், தமிழர் விளையாட்டுத்துறையினரால் வரும் 17.07.2016 ஞாயிறு அன்று நடாத்தப்படும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் இறுதிப்போட்டியில், உதைபந்தாட்ட இறுதிப்போட்டி நடைபெறமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

தமிழர் விளையாட்டுத்துறை – பிரான்சு.

tvt_lt_psdpppp_copy
அண்மையில் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு வெளியிட்ட அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.tvt lt copy.jpg01

tvt lt copy.jpg02

tvt lt copy.jpgtvt003 (1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here